இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து 3 ஒரு நாள் மற்றும் 3 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரில் தோல்வியை தழுவிய நியூஸிலாந்து 20 ஓவர் தொடரில் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடி வருகிறது.
தொடர் சமன்
முதல் போட்டியில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற இரண்டாவது போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது .
கடைசி போட்டி
தொடர் வெற்றியை நிர்ணயிக்க போகும் கடைசி போட்டி நாளை நவம்பர் 07 செவ்வாய் அன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
மிரட்டும் மழை
திருவனந்தபுரத்தில் மழை பெய்து வருவதால் நாளை போட்டி நடைபெறும் போது மழை குறுக்கீட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அனைத்தையும் தாண்டி பேட்டிங்கில் மிரட்டி இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பாக்கலாம்.
No comments:
Post a Comment